மழைவெள்ளத்தை சமாளிக்க நகரை இஞ்ச் இஞ்சா செதுக்கியிருக்காங்க! சூரத் மாநகராட்சியிடமிருந்து சென்னை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

Local Bodies Need Autonomy From State Govts

Update: 2021-11-09 13:58 GMT

ஒவ்வொரு முறையும் குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை சிறப்பாக அமல்படுத்தியதற்காக ஒட்டுமொத்த விருதை பெற்றுள்ளது. குறைவான மழைப்பொழிவின் போதே சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், 2006ஆம் ஆண்டு மிகப்பெரிய வெள்ளத்தை எதிர்கொண்டு, அதற்கு பிறகு மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளது சூரத். இதற்கு மாநகராட்சி கொண்டு வந்த வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் முக்கிய காரணமாகும்.

தபி ஆற்றின் வலதுபுறத்தில் ஒன்பது கிமீ நீளத்திற்கு நீர்ப்பாசனத் துறை அணை கட்டும் திட்டத்தை கொண்டு வந்தது.  குஜராத் இன்ஜினியரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (GERI) நடத்திய ஆய்வின் அடிப்படையில், உகை அணையில் இருந்து 600,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டால், புதிய அணை மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

சௌ பஜார் நேரு பாலம் முதல் மாகலியாவில் உள்ள ஓஎன்ஜிசி பாலம் வரை 9.73 முதல் 10.73 மீட்டர் உயரமுள்ள அணைக்கட்டு 600மிமீ அகலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது. அணையில் இருந்து பெரிய அளவில் தண்ணீர் திறக்கப்படும் போது, இந்த கட்டமைப்பு மறுபுறத்தில் நகரத்தை பாதுகாக்கின்றது. உகை அணையில் இருந்து 300,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் வரை சூரத் பாதுகாப்பாக இருக்கும் வகையில் வடிவமைப்பு உள்ளது. ஆனால் நீரின் அளவை 400,000 கனஅடியாக உயர்த்தினால், ஆற்றின் வலதுபுறத்தில் உள்ள ராண்டர், அடாஜன் மற்றும் பால் பல தாழ்வான பகுதிகள் மட்டும் வெள்ளத்தில் மூழ்கும். 2006 ஆம் ஆண்டு அணைக்கட்டு பற்றிய யோசனை முதன்முதலில் முன்வைக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு, வெள்ள நீர் வடிய பல்வேறு வடிகால் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்பட்டது.

2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்திற்குப் பிறகு, நகராட்சி அரசாங்கம் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை அமைத்து, ஆற்றுக்கு கரை கட்டும் பணியைத் தொடங்கியது. இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் உகை அணையின் நீர்மட்டம் குறித்த விவரங்கள் உள்ளன. அவசரநிலை ஏற்பட்டால், அதன் மூலம் சூரத் மக்களுக்கு எச்சரிக்கை செய்திகளை அனுப்பலாம்.

இந்த நடவடிக்கைகள் 2013 இல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்கனவே அணை நிரம்பியபோது கனமழையை முன்னறிவித்தது. மழை எதிர்பார்க்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அணை தூர்வாரும் பணி நடக்கிறது. கேரளா அல்லது தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில், குஜராத்தில் உள்ள நகர அரசாங்கங்கள் சேவைகளை வழங்குவதற்கு அதிக நகராட்சித் திறனைக் கொண்டுள்ளன.

நகர்ப்புற உள்ளூர் சேவைகளில் -நீர் வழங்கல், சுகாதாரம், மழை நீர் வடிகால், தெரு விளக்கு மற்றும் பலவற்றில் மாநிலங்கள் கணிசமான வேறுபாடுகளை காட்டுகின்றன. சேவைகள் பரவலாக்கப்பட்டதா இல்லையா என்பதில் வேறுபாடுகள் உள்ளன. கேரளாவில், உள்ளூர் சேவை வழங்குவது பெரும்பாலும் மாநில அரசாங்கத்தின் மூலம் நிகழ்கிறது, உள்ளூர் நகர அரசாங்கங்களால் அல்ல.

இது ஓரளவிற்கு இருந்தாலும், தமிழ்நாட்டிற்கும் பொருந்தும். குஜராத்தில் உள்ளூர் நகர அரசாங்கங்களுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. அதன் மூலம் திட்டங்கள் எளிதாக செயல்படுத்தப்படுகின்றன. 2006ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகு அதிலிருந்து படம் கற்று, முறையான திட்டமிடல் மூலம் இன்றைக்கு வெள்ள அபாயம் குறைந்த பகுதியாக மாற்றியுள்ளது அன்றைய மோடி அரசாங்கம்.







Similar News