சுஷாந்த் சிங் வழக்கு: ரியாவுக்கு போதை விற்ற குற்றவாளி ரெஜெல் மஹாகல் கைது.!

சுஷாந்த் சிங் வழக்கு: ரியாவுக்கு போதை விற்ற குற்றவாளி ரெஜெல் மஹாகல் கைது.!

Update: 2020-12-09 15:10 GMT

இந்த ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் தொடர்புடைய வழக்கில், போதைப் பொருள் பயன்படுத்தியதற்காகக் கைது ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் இருவருக்கும் போதைப் பொருட்களை வழங்கிய குற்றவாளி ரெஜெல் மஹாகல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், டிசம்பர் 9 ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரானால் கைது செய்யப்பட்டுள்ளான். 

குற்றவாளி ரெஜெல், அனுஜ் கேஷ்வானி மற்றும் பலருக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்துள்ளான். மும்பை லோகண்ட்வாலா பகுதியில் NCB நடத்திய சோதனையில், பணம் மற்றும் உயர்தரமான கலப்படமில்லாத கஞ்சா எனப்படும் 'மலானா கிரீம்' போன்றவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 2.5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னர் NCB போதைப் பொருள் தொடர்புடைய வழக்கில் அனுஜ் கேஷ்வானியை கைது செய்தது. ரியா, ஷோயிக் இவர்களைத் தவிர, அப்துல் பாசித், சயிட் விலாத்ரா, டிபேஷ் சாவந்த் மற்றும் சாமுவேல் மிராண்டா முதலியோரையும் NCB கைது செய்துள்ளது. மஹாகல்  முதலில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் இரண்டு நாட்கள் NCB யின் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்த சுஷாந்த் மரண  வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து NCB ஒரு வழக்கைப் பதிவு செய்தது. இது தொடர்பாக சுஷாந்த் முன்னாள் காதலி ரியா மற்றும் அவரது சகோதரரைக் கைது செய்தது. பின்னர் அக்டோபர் 7 ஆம் தேதி ரியா பெயிலில் விடுவிக்கப்பட்டார். அவரது சகோதரர் டிசம்பர் 7 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். 

Similar News