புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறையில் இந்தியா 4வது இடம்: வளர்ச்சியை ஊக்குவிக்க பிரதமர் முடிவு!

பசுமை எரிசக்தி துறையில் நிலையான வளர்ச்சியை உருவாக்க அரசு உறுதியுடன் உள்ளது என்று பிரதமர் கூறினார்.

Update: 2023-02-23 11:54 GMT

பசுமை எரிசக்தி துறையில் நிலையான வளர்ச்சியை உருவாக்க அரசு உறுதியுடன் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே தனது ட்விட்டரில் ஃபேம்-II திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் 22.9 கோடி லிட்டர் எரிபொருளைச் சேமித்து, 33.9 கோடி கிலோ கரியமில வாயு உமிழ்வைக் குறைத்துள்ளன என்று தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டிற்கு மோடி பதிலளித்து கூறியிருப்பதாவது, பசுமை எரிசக்தி துறையில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த எங்கள் அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என கூறினார்.


மேலும் மின்சார வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிசக்தி மூலம் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகள் மற்றும் சூரியசக்தியில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறை நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் சார்பில் புதுதில்லியில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய ஆய்வகத்தில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தூய மற்றும் நீடித்த எரிசக்தி தொழில்நுட்பங்கள் சார்ந்த கருத்தரங்கத்தை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் தொடங்கிவைத்துப் பேசினார்.


அப்போது 2022-ம் ஆண்டில் 100 ஜிகாவாட்ஸ் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்ததை நினைவுகூர்ந்தார். தார் பாலைவனம் சூரிய சக்தி மின்சாரத்திற்கான மிகப்பெரிய வளமாக இருப்பதாகவும், அங்கிருந்து 2100 ஜிகாவாட்ஸ் வரையிலான சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மத்திய அரசின் தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் படி 2030-ம் ஆண்டிற்குள், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பையும், டீசலில் 5 சதவீதம் உயிரி- டீசல் கலப்பையும் வெற்றிகரமாக செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News