குடியரசு தின வன்முறையின் போது வாள் சுழற்றிய குற்றவாளி கைது.!

குடியரசு தின வன்முறையின் போது வாள் சுழற்றிய குற்றவாளி கைது.!

Update: 2021-02-17 13:13 GMT

டெல்லியில் ஜனவரி 26 இல் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மனீந்தர் சிங்கை டெல்லி சிறப்புக் காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து 4.3 அடி நீளமுள்ள வாளையும் பறிமுதல் செய்துள்ளது. 

மேலும் குற்றவாளியிடம் இருந்து ஜனவரி 26 இல் செங்கோட்டையில் நடந்த வன்முறையில் அவரது நீண்ட வாள் ஆடுவது குறித்து வீடியோவும் மொபைலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அவர் வன்முறையில் பங்குபெற்றதற்கான பல்வேறு புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மோனி என்றும் அழைக்கப்படும் இவர் கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார். "கைது செய்யப்பட்ட நபர் இரண்டு நீண்ட வாள்கள் வைத்துத் தாக்குதல் நடத்துவது வீடியோவில் தென்படுகிறது. மேலும் ஆயுதங்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவை காவல்துறையை  மற்றும் வரலாற்று நினைவுச் சின்னமான செங்கோட்டையையும் சேதம் செய்துள்ளது." 

குற்றவாளி பல்வேறு குழுக்களின் ஆத்திரமூட்டும் இடுக்குகளை பேஸ்புக்கில் பார்த்து ஈர்க்கப்பட்டுள்ளார். அடிக்கடி சிங்கு எல்லையில் வந்து தலைவர்களின் பேச்சுக்களையும் கேட்டுக் கவரப்பட்டுள்ளார். இவர் மேலும் தனது பகுதியில் உள்ள ஆறு பேரையும் ஊக்கப்படுத்தி வன்முறைக்குத் தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

"அவர்கள் ஆறு பேரும் வன்முறையின் போது பைக்கில் வந்து டிராக்டர் பேரணியில் இணைந்துள்ளனர். பேரணியில் சேருவதற்கு முன்பு மனீந்தர் சிங் இரண்டு நீண்ட வாள்களை தன்னுடன் வைத்திருந்தார்," என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் இவர் வாளை வைத்துக் கொண்டு நடனமாடி சாகசம் காட்டியது போராட்டக்காரர்களைத் தூண்டி செங்கோட்டையில் வன்முறையில் தீவிரமாக ஈடுபடச் செய்தது. இதுமட்டுமல்லாது அவர்கள் பொது ஊழியர்கள் மற்றும் பணியிலிருந்த காவல்துறை மற்றும் செங்கோட்டையை முதலியவற்றையும் தாக்கினர். 

குற்றவாளியான மனீந்தர் சிங் தனது வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளியில் வாள் பயிற்சியும் அளித்து வருகிறார். மேலும் குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. 

Similar News