சீனாவின் புதிய ராணுவ பயிற்சி - தைவானுக்கு எதிராக போரை தொடங்குகிறதா?

தைவானுக்கு எதிராக சீனாவின் புதிய ராணுவ பயிற்சி ஒத்திகையை தொடங்கி உள்ளது.

Update: 2022-08-18 01:54 GMT

தற்போது சீனா தன்னுடைய கடல் எல்லை யோட பகுதிகளில் வலுவான ஒரு ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தப் போர் பயிற்சி காரணமாக எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு உள்ளதா? என்று பல்வேறு நாடுகள் தரப்பிலிருந்து பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் தைவான் கடலோரப் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். சீனாவின் நடவடிக்கைகள் முற்றிலுமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


இந்த ஒரு சமயத்தில் தான், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பயணம் மேற்கொண்டார். நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் சீனா குற்றம்சாட்டியது. சீனாவின் எதிர்ப்பை மீறியும் தலைவனுக்கு அவர் சென்று அதை கண்டிக்கும் வகையில் அதிநவீன ஏவுகணை போர் ஒத்திகை விரைவில் நடக்கும் என்றும் சீன தரப்பில் அறிவித்திருந்தது. 


இந்த மாதிரியான ஒத்திசை பயிற்சியில் ஹெலிகாப்டர்கள், தொலைவில் இருந்து துல்லியமாக சுடும் துப்பாக்கிகள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்படும் என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது. தைவானை சுற்றியுள்ள தீவுகளில் சீனாவின் போர் ஒத்திகைகள் 4வது நாளாக நீடித்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் சீனாவில் அறுபத்தி ஆறு போர் விமானங்களும் 15 போர்க்கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளது இரவு கூட சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டது இருப்பது அண்டை நாட்டினர் பயத்தில் ஆழ்த்தி உள்ளது என்று கூறலாம் என்று தைவான் நாட்டின் பாதுகாப்புத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. 

Input & image courtesy: DD News

Tags:    

Similar News