"தலிபான்களில் கேரளாவை சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளது" - சசி தரூர் பகீர் கருத்து !
சசி தரூரின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது !
புதுடில்லி: 'தலிபான் பயங்கரவாதிகளில் மலையாளிகளும் இடம் பெற்றுள்ளனர்' என காங்கிரஸ் முக்கிய தலைவர் சசி தரூர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரமீஸ் ராஜா என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றும் 'வீடியோ' பதிவை வெளியிட்டு, 'காபூலை கைப்பற்றும் மகிழ்ச்சி பெருக்கில் தலிபான்கள்' என, பதிவிட்டிருந்தார்.
இதற்கு சசிதரூர் அளித்த பதிலில், 'வீடியோவை பார்த்தபோது தலிபான்களில் இரண்டு மலையாளிகள் உள்ளது தெரிகிறது. அவர்கள் இருவரும் மலையாளத்தில் பேசிக் கொள்கின்றனர்' எனக் கூறிஇருந்தார்.இதற்கு ரமீஸ் ராஜா, 'தலிபான்களில் கேரளாவை சேர்ந்த யாரும் இல்லை. அவர்கள் ஆப்கனின் ஜாபுல் மாகாணத்தின் பலோக் பகுதியை சேர்ந்தவர்கள். பலோக் பகுதியினர் பேசும் மொழி, கேட்பதற்கு மலையாளம் போல் இருக்கும்' என்றார்.
இதற்கு சசி தரூர், 'தலிபான்களில் கேரளாவை சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளது' என்றார். சசி தரூரின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: கேரள மக்களை பயங்கரவாதத்துடன் இணைத்து சசி தரூர் கூறியுள்ளது, அவர்களை அவமதிக்கும் செயல்.
Image Source : NDTV