தமிழ்நாடு: விவசாய சட்டங்களுக்கு எதிராகக் கடைகளை திறக்கவேண்டாமென்று கட்டளையிடும் முஸ்லீம் ஜமாத் அமைப்புகள்.!

தமிழ்நாடு: விவசாய சட்டங்களுக்கு எதிராகக் கடைகளை திறக்கவேண்டாமென்று கட்டளையிடும் முஸ்லீம் ஜமாத் அமைப்புகள்.!

Update: 2020-12-13 14:24 GMT

தற்போது நடந்துவரும் விவசாய மசோதாக்களுக்கு எதிராகப் போராட்டத்தில் பல திருப்பங்களும் உண்டாக்குகின்றன. அதில் பல ஆபத்துகளும் நிறைந்துள்ளன. தற்போது இந்த போராட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள்  பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. 

தற்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விவசாய மசோதாவுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவிக்கத் தமிழ்நாட்டில் முஸ்லீம் ஜமாத் அமைப்புகள் தங்கள் சக முஸ்லீம் கடை உரிமையாளர்களின் கடைகளை அடைக்குமாறு வற்புறுத்தி வருகின்றனர். சில விவசாய அமைப்புகள் விவசாய சட்டங்களுக்கு எதிராக டிசம்பர் 8 ஆம் தேதி நாடு தழுவிய அடைப்புக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, தமிழ் நாடு கூடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லால்பேட் முஸ்லீம் ஜமாத் அமைப்புகள் முஸ்லீம் கடை உரிமையாளர்களை மத்திய அரசு விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து கடைகளை அடைக்குமாறு கட்டாயப்படுத்தினர். 

இந்த நிகழ்வானது கமெராவில் பதிவு செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகின்றது. அதில் முஸ்லீம் ஒருவர் சக முஸ்லீம் நபர்களுக்கு டிசம்பர் 8 ஆம் தேதி கடைகளை அடைக்குமாறு விதிமுறைகளை வாசிப்பதைக் காணமுடிந்தது. 

இந்தியாவில் விவசாயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. மேலும் மத்திய அரசு அமல்படுத்துவதற்கு முன்பே இதுபோன்று விவசாய சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. 

இதேபோன்றே பல அரசியல் விவகாரங்களில் தமிழ்நாட்டில் முஸ்லீம் ஜமாத்துகள் தலையிட்ட பல நிகழ்வுகள் உள்ளது. டெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டம் நடந்ததை போன்றே சென்னையின் வாஷர்மன்பேட்டை பகுதியில் நடத்த முயன்றனர். மேலும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க CAA விற்கு எதிராக தங்கள் பணத்தைப் பாதுகாக்க வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்குமாறும் முஸ்லீம் ஜமாத்துகள் முஸ்லீம் சமூகத்தைக் கேட்டுக்கொண்டனர். 

சமீபத்தில், தேசிய புலனாய்வு அமைப்பு(NIA)  லால்பேட்டை முஸ்லீம் ஜமாத் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் வீடுகளைச் சோதனை செய்ததில் IS ஓடு தொடர்புடையதற்காக எட்டுபேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது. 

Similar News