இஷ்டத்துக்கு உடை அணிவது தான் பெண் சுதந்திரமா: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!
பெண்களுக்கு எத்தனை பிரச்சனைகளை வந்தாலும் தற்கொலை என்கின்ற முடிவை எடுக்கக்கூடாது என்றும் பெண்கள் தங்களின் பிரச்னைகளை கூறுகின்ற வகையில் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தேசிய மகளிர் தினத்தையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு ஒருநாள் ஊடக பயிற்சி முகாமை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்; மார்ச் 8 மட்டுமின்றி அனைத்து நாட்களுமே பெண்களுக்கான தினம் என்பதால் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வேறு மாநிலங்களில் கலந்து கொண்டாலும் தமிழகத்தில் கலந்து கொள்வதுதான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த தடைகள் வந்தாலும் அதனை உடைத்து விட்டு மேலே வர வேண்டும் என்பது எனது விருப்பம்.
மேலும், பெண்களுக்கு மட்டுமே வீட்டிற்கு விரைவாக வரவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால் ஆண்களுக்கும் அது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தால் மட்டுமே பெண்களிடம் சராசரியாக நடந்து கொள்வார்கள். மேலும், பெண்ணுரிமை என்பது நாம் நினைப்பதில்தான் பிரச்சனை ஏற்படுகின்றது. நாகரிகமான முறையில் உடைகள் உடுத்துவதில் கவனம் இருக்க வேண்டும். மற்றவர்களின் முகம் சுளிக்கின்ற வகையில் உடை அணியக் கூடாது. எப்போதும் உடையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: Twiter