3,825 வேலை வாய்ப்புகளுக்கு இலக்கு! உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்காக 5 நிறுவனங்களுக்கு ஒப்புதல்!

3,825 வேலை வாய்ப்புகளுக்கு இலக்கு! உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்காக 5 நிறுவனங்களுக்கு ஒப்புதல்!

Update: 2021-02-17 10:13 GMT
உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்காக, உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ்,  5 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களை  இந்நிறுவனங்கள் பூர்த்தி செய்துள்ளதால், இந்த 5 நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்களின் வணிக உற்பத்தி 2023 ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆறு ஆண்டுகளில் அரசாங்கத்தால் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்படுவது அதிகபட்சமாக ரூ. 3,600 கோடி வரை வழங்கப்படும். இந்த ஆலைகளை அமைப்பது மொத்த மருந்துகளின் உற்பத்தியை  பொறுத்தவரை நாட்டை பெருமளவில் தன்னம்பிக்கை கொள்ள வைக்கும்.

இந்த ஆலைகள் அமைப்பதன் மூலம் மொத்தம் ரூ.3,761 கோடிக்கு முதலீடு செய்யப்படும் மற்றும் 3,825 வேலை வாய்ப்புகள் உருவாகும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து தற்சார்பு இலக்கை அடையவும், முக்கிய மருந்து பொருட்களின் ஏற்றுமதியை குறைக்கவும், மருந்துகள் துறை, உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தை தொடங்கியது.

மொத்தம், 4 இலக்கு பிரிவுகளில் 36 தயாரிப்புகளுக்கு 215 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் 90 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் மற்றும் முடிவு செய்யப்படும் என்று வழிகாட்டுதல்கள் பரிந்துரைத்தன. மேலும், மற்ற மூன்று பிரிவுகளின் கீழ் உள்ள விண்ணப்பங்கள் அடுத்த 45 நாட்களில் ஒப்புதலுக்கு எடுத்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருந்துத் தொழிலில் உலக அளவில் 3 வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல மேம்பட்ட பொருளாதாரங்களில் அதிக சந்தை இருப்பைக் கொண்டுள்ளது. மலிவு மருந்துகளை உற்பத்தி செய்வதில் இந்தியா நன்கு அறியப்பட்டிருக்கிறது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனங்கள்

S.No.

Name of approved Applicant

Name of Eligible Product

Committed Production Capacity

(in MT)

Committed Investment

(in Rs. crores)

1.

M/s Aurobindo Pharma Limited (through LyfiusPharmaPvt. Ltd.)

Penicillin G

15000

1392

2.

M/s Karnataka Antibiotics & Pharmaceuticals Ltd.

7 - ACA

1000

275

3.

M/s Aurobindo Pharma Limited (through LyfiusPharmaPvt. Ltd.)

2000

813

4.

M/s Aurobindo Pharma Limited (through Qule Pharma Pvt. Ltd.)

Erythromycin Thiocyanate (TIOC)

1600

834

5.

M/s Kinvan Pvt. Ltd.

Clavulanic Acid

300

447.17

Similar News