இந்தியாவை இழிவுபடுத்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்! விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் தேசவிரோத செயல்!

இந்தியாவை இழிவுபடுத்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்! விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் தேசவிரோத செயல்!

Update: 2021-02-05 06:30 GMT

புதிதாக வகுக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக, வெளிநாடுகளில் இருந்து பிரச்சாரம் தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு பிரச்சாரத்தை எதிர்ப்பதற்கான ஒரு ஆவணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆவணத்தில், அதன் நகலை டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்டது. திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை அரசாங்கம் "பிரீ ஸ்கிரிப்ட் பிரச்சாரம்" என்று விவரித்துள்ளது.

காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இந்தியாவில் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து தனது ட்வீட் மூலம், உணர்ச்சியை தூண்டிவிட்டு ஒரு நாள் கழித்து இந்த ஆவணமானது வெளியிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் ட்வீட் பதிவிட்டார்.

பின்னர் அவர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டு, புதிய பதிவு ஒன்றை வெளியிட்டார். முந்தைய ட்வீட் காலாவதியானது என்பதை தெளிவுபடுத்தினார். இது போன்ற பிரச்சாரங்கள் ஒரு தரப்பினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் பாடகர் ரிஹானா உட்பட பல உலக பிரபலங்கள் ட்வீட் செய்தபோது இந்த சர்ச்சை வெடித்தது.

பல மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் நேற்று வெளிவந்ததாகக் கூறப்படும் வெளிநாட்டு பிரச்சாரத்தை எதிர்த்து அது இந்தியாவின் உள் நாட்டு விஷயம் என்று கூறினார்.

சர்ச்சை குறித்து பதிலளித்த அரசாங்கம், ஆவணத்தை வெளியிட்டு மோசடிகளை அமபலப்படுத்தியது. “கிரெட்டாவால் தவறாகப் பகிரப்பட்ட ஆவணம் ரிஹானா மற்றும் பிறரின் ட்வீட்டுகள், இந்தியாவை கேவலப்படுத்தும் ஒரு பெரிய PR பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்பதையும் காட்டுகிறது.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள முக்கியமான நபர்களின் இதுபோன்ற அறிக்கைகள் மற்றும் ட்வீட்களை திட்டத்தின் பின்னணியில் மற்றும் முன் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட பிரச்சாரமாக இது தெரிகிறது.

Similar News