ஓட்டல்களில் தங்கக்கூடாது! உறவினர்களை உதவியாளராக நியமிக்கக்கூடாது: அமைச்சர்களுக்கு செக் வைத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்!
உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்நாத் தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதாவது அவர் கூறிய உத்தரவுகளில், அமைச்சர்கள் அரசு முறை பயணமாக வெளியூர் செல்லும்போது ஓட்டல்களில் தங்கக்கூடாது. அரசு விருந்தினர் விடுதிகளில் மட்டுமே தங்க வேண்டும். அதே போன்று இந்த உத்தரவுகள் அதிகாரிகளுக்கும் பொருந்தும். மேலும், அமைச்சர்கள் தங்களின் உறவினர்களை யாரும் தனி உதவியாளராக நியமனம் செய்யக்கூடாது.
அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நேரத்திற்கு அலுவலகத்திற்கு வரவேண்டும். தாமதமாக வரும் நபர்கள் மீது கடுமையா நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Daily Thanthi