400 ரயில் நிலையங்களில் மண் குவளையில் மட்டுமே இப்போது டீ, காபி சப்ளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம் .!

400 ரயில் நிலையங்களில் மண் குவளையில் மட்டுமே இப்போது டீ, காபி சப்ளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம் .!

Update: 2020-11-30 12:14 GMT

நாடு முழுவதும் தற்போது 400 ரயில் நிலையங்களில் மண் குவளை பயன்படுத்தப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறி உள்ளார்.  பிளாஸ்டிக் கப்கள் இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக மண் குவளையை பயன்படுத்த மத்திய அரசு  முதன்முதலாக நடவடிக்கை எடுத்தது. 

அதன்படி, வாரணாசி உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில்  400 ரயில் நிலையங்களில் செயல்படுத்தி தற்போது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்குவளைகளில் தேநீர் விற்பனை செய்யப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இது பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை நோக்கி ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும். அதே நேரத்தில் இது ரயில்வே பயணிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று என்று கூறிய அவர் இதன் மூலம் உள்ளூர் மண்பாண்ட தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை பெறுவர் என்று கூறினார்.

இது குறித்து ராஜஸ்தானின் திகாவரா ரயில் நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு அவர் கூறினார்.

Similar News