முஹர்ரம் நாளில் இறப்பது தன்னை ஜன்னத்துக்கு அழைத்துச்செல்லும் என்று நம்பி உயிரைவிட்ட 15 வயது சிறுமி.!
15-year-old girl ends her life after being told that those who die on Muharram go to heaven
இந்தூரில் 15 வயது சிறுமி முஹர்ரம் நாளில் இறப்பது தன்னை ஜன்னத்துக்கு அல்லது சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்பி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்வதற்கு முன்பு, சிறுமி தனது தாயிடம், "இமாம் ஹுசைன் இன்று தியாகியாக்கப்பட்டாரா..? இன்று இறந்தவர்கள் சொர்க்கம் செல்வார்களா? என்று கேட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தூரில் உள்ள சம்பாக் பகுதியில் வசிக்கும் ராபியா என்ற அந்த சிறுமி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் முஹர்ரம் நோன்பு இருந்தார். அப்போது, கீர் சாப்பிடும் போது, தனது தாயிடம் ஒரு கேள்வியைக் கேட்டார், "இன்று இறப்பவர்கள் தியாகம் செய்வார்களா? அவர்கள் சொர்க்கம் செல்வார்களா? என்று கேட்டபடியே இருந்துள்ளார்.
சிறுமியின் தாய் ஆமாம் என உறுதியுடன் பதிலளித்ததாகவும், சிறிது நேரம் கழித்து, சிறுமி தனது அறையில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சிறுமியை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அவர் சமீபத்தில் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்த சிறுமி, தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை குடும்ப உறுப்பினர்களால் ஜீரணிக்கமுடியவில்லை.
ஆனால் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் மரணம் காரணமாக அந்தப் பெண் சில மாதங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணத்தை அறிய அவரது குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலத்தை காவல்துறை பதிவு செய்யும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.