தெலுங்கானா விபத்து - உடனடியாக 2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
தெலுங்கானா மாநிலத்தில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் பாரதப் பிரதமர் மோடி.
தெலுங்கானா மாநிலத்தில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் பாரதப் பிரதமர் மோடி.
தெலுங்கானா மாநிலம் கமரெட்டி மண்டலம் பகுதியைச் சேர்ந்த 28 பேர் சந்தையில் பொருட்கள் வாங்கிவிட்டு மினி லாரிகளில் வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது எதிர் பகுதியிலிருந்து நிஜாம் சாகருக்கு நவதானியங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது எதிர்பாராதவிதமாக இந்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
சாலையில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 19 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்,
தெலுங்கானாவை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் மேலும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தெலங்கானா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.