121 வருடங்களில் இல்லாத வெப்பநிலை, தென்னிந்தியாவில் பதிவு: இந்திய வானிலை ஆய்வு மையம்.!
121 வருடங்களில் இல்லாத வெப்பநிலை, தென்னிந்தியாவில் பதிவு: இந்திய வானிலை ஆய்வு மையம்.!;
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டில் 62 வருடங்களில் இல்லாத வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிலும் குறிப்பிடும்படியாக, தென்னிந்தியாவில் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. இவை கடந்த 121 ஆண்டுகளில் 22.33 டிகிரி செல்சியஸ் என்ற அதிகபட்சமான வெப்பநிலை தென்னிந்தியாவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1919ம் ஆண்டில் 22.14 டிகிரி செல்சியஸ் ஆகவும், கடந்த 2020ம் ஆண்டில் இது 22.93 டிகிரி செல்சியஸ் ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், மத்திய இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த 38 வருடங்களில் இல்லாத வகையில் கடந்த 1982ம் ஆண்டுக்கு பின்னர் 14.82 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தற்போது நாட்டில் குளிர்காலம் நிலவி வருகின்ற சூழலில் இப்படி வெப்பம் உயர்ந்துள்ளது. இன்னும் கோடை காலம் வந்த பின்னர் வெப்பம் மேலும் அதிகரிக்குமோ என்று மக்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. சுற்றுச்சூழலை மனிதர்கள் பாதுகாத்து வந்தால் இயற்கை சீற்றங்களில் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்போம் என்பது எந்தவித சந்தேகமும் இல்லை.