ஆந்திராவில் கோயில் சிலைகள் சேதம்.. பாதிரியாரை அதிரடியாக கைது செய்த போலீஸ்.. யூடியூப் சேனலால் மாட்டிக்கொண்டது அம்பலம்.!

ஆந்திராவில் கோயில் சிலைகள் சேதம்.. பாதிரியாரை அதிரடியாக கைது செய்த போலீஸ்.. யூடியூப் சேனலால் மாட்டிக்கொண்டது அம்பலம்.!

Update: 2021-01-17 18:43 GMT

ஆந்திரா மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்து கோயில்களில் உள்ள சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் பாதிரியார் உட்பட 24 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்து கோயில் கோபுரங்கள் மற்றும் சுவாமி சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அந்தர்வ வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேர் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. மேலும், விஜயநகரத்தில் உள்ள கோதண்டராமர் சிலையின் தலை வெட்டப்பட்டு மற்றொரு இடத்தில் வீசப்பட்டதுதான் இந்துக்கள் மத்தியில் பெரும் புயலை கிளப்பியது.

இதனைதொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள இந்துக்கள் அனைவரும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் எதிராக கிளம்ப ஆரம்பித்தனர். இதன் பின்னரே அம்மாநில முதலமைச்சர் சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், கோயில் சிலைகளை சேதப்படுத்திய குற்றத்திற்காக காக்கிநாடாவை சேர்ந்த பாதிரியார் பிரவீன் சக்ரவர்த்தி உட்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி அந்த பாதிரியார் யூ டியூப் சேனலில் பேசியுள்ளார். ஆந்திரா மாநிலம் முழுவதும் உள்ள இந்துக்களை மதம் மாற்றுவதே எங்களின் முக்கியப்பணி. இதுவரை 699 கிராமங்களை கிறிஸ்தவ கிராமங்களாக மாற்றி உள்ளோம். மதம் மாறியவர்களின் கைகளாலேயே கோயில் சிலைகளை உடைக்க வைத்தோம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதனை கண்காணித்து வந்த போலீசார் அந்த பாதிரியாரை கையும் களவுமாக பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News