10ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து ஈ.வே.ராமசாமி பற்றிய பகுதிகள் அதிரடி நீக்கம்!

Update: 2022-05-21 01:30 GMT

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப் புத்தக்கத்தில் இருந்து பெரியார் குறித்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. 

மாநில பாடநூல் கழகத்தின் இணையதளத்தில் புதிய சமூக அறிவியல் பாடநூலின் பிடிஎஃப் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பகுதி 5 சமூக, மத சீர்திருத்த இயக்கங்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருக்கிறது.

அந்தப் பாடத்தில் பிரம்ம சமாஜ் நிறுவிய ராஜாராம் மோகன் ராஜ், ஆர்ய சமாஜம் நிறுவிய தயானந்த் சரஸ்வதி, பிரார்த்தன சமாஜ் நிறுவிய ஆத்மாராம் பாண்டுரங்,ராமகிருஷ்ண மிஷனை தோற்றுவித்த ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் பற்றி தகவல் உள்ளது. ஆனால் பெரியார் பற்றி முந்தைய பதிப்பில் இடம்பெற்றிருந்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.​​லோபோ, இந்த வளர்ச்சியானது மாபெரும் சமூக சீர்திருத்தவாதியை அவமானப்படுத்துவதாக உள்ளது. எனினும், பாடப்புத்தகங்கள் இன்னும் அச்சிடப்படாததால் விடுபட்ட பாடத்தை சேர்க்க அரசுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. உடனடியாக அரசு இதற்கு முனைப்பு காட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.

Inputs From: News 18

Similar News