'அக்னிபத் தேசத்திற்கான திட்டம்' - கடற்படைத்தளபதி ஹரி குமார் கூறிய இளைஞர்களுக்கு கூறிய முக்கிய செய்தி
'அக்னிபாத் திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டதே, இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என கடற்படைத் தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார்.
'அக்னிபாத் திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டதே, இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என கடற்படைத் தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 'அக்னிபத்' என்ற ராணுவத்தில் இளைஞர்களை 4 வருடம் சேர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாள் முதல் இந்தியாவில் சில இடங்களில் மூன்று நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. ராணுவத்தில் சேருவோம் எனக்கூறும் சிலர் ரயில்களை எரித்தும் கற்களை எறிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ''அக்னிபத்' திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டது இந்த வாய்ப்பு இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என கடற்படைத் தளபதி ஹரிகுமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் 'போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதை விரும்பவில்லை எனவும் அமைதியை கடைபிடிக்க வேண்டும்' எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்தத் திட்டத்தை உருவாக்க ஒன்றரை வருடங்கள் காலம் ஆனது எனவும் அதில் பணியாற்றிய நினைவுகூர்ந்த அவர் இப்போது அடுத்தடுத்து நிறைவடைந்தது அறிமுகப்படுத்துவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.