போராட்டங்களை கைவிடும் இரண்டு விவசாய சங்கங்கள் நடந்த வன்முறைக்கு வேதனை!

போராட்டங்களை கைவிடும் இரண்டு விவசாய சங்கங்கள் நடந்த வன்முறைக்கு வேதனை!

Update: 2021-01-28 07:30 GMT

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு,  விவசாயிகளின் போராட்டங்களை விட்டு உடனடியாக விலகிக் கொள்வதாக விவசாயத் தலைவர் வி.எம்.சிங் நேற்று (புதன்கிழமை) அறிவித்தார்.  

குடியரசு தினத்தன்று டெல்லியின் தெருக்களில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி பரவலான வன்முறைக்கு வழிவகுத்த ஒரு நாள் கழித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

காசிபூர் எல்லையில் நடந்த கலவரத்துக்கு பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் தான் காரணமாக இருந்ததாக சிங் குற்றம் சாட்டினார்.

 ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சிங், “வேறு யாருடைய வழிகாட்டுதலுடன்  நடக்கும் இந்த போராட்டத்தை எங்களால் முன்னெடுக்க முடியாது.  எனவே, நான் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு இந்த போராட்டத்திலிருந்து இப்போதே விலகிக் கொண்டிருக்கிறது.” என்று தெரிவித்தார்.

 காசிப்பூரில் நடந்த வன்முறைக்கு ராகேஷ் டிக்கைட்டைக் குற்றம் சாட்டிய ​​சிங், ஜனவரி 25 இரவு BKU  தலைவரை சந்தித்ததாகக் கூறினார், மேலும் காசிப்பூரிலிருந்து காலை 11 மணிக்கு டிராக்டர் பேரணியை தொடங்க  அவர்கள் பரஸ்பரம் ஒப்புக்கொண்டனர் எனவும் ஆனால் ஜனவரி 26 ஆம் தேதி காலை 10 மணியளவில் அவர் காசியூரை அடைந்தபோது, ​​டிக்கைட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே தடுப்புகளை உடைத்து டிராக்டர் அணிவகுப்புடன் முன்னேறியதைக் கண்டதாகவும் கூறினார். 

 

செங்கோட்டையில் ஒரு மதக் கொடியை ஏற்றுவது தவறு என்று இந்த விவசாய தலைவர் வலியுறுத்தினார்.  சீக்கிய மதத்தின் அடையாளமான 'நிஷன் சாஹிப்' செங்கோட்டையில் ஏற்றப்பட்ட போது அனைத்து சீக்கியர்களும் வெட்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சிங் கூறினார்.  'நிஷன் சாஹிப்' என்பது முக்கோண வடிவில் உள்ள கொடியாகும், இது சீக்கியர்களுக்கு புனிதமானது மற்றும் குருத்வாரா வளாகங்களின் உச்சியில் வைக்கப்பட்டுள்ளது.

 வன்முறைக்கு அரசாங்கத்தையும் அவர் குற்றம் சாட்டினார்.  "சில விவசாயிகள் தங்கள் டிராக்டர் அணிவகுப்பை குறிப்பிட்ட  நேரத்திற்கு       முன்னதாக ஆரம்பித்தபோது அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது?"  அவர் கேட்டார்.

 "செங்கோட்டையில் அந்த மதக் கொடியை ஏற்றி வைக்கும் நபர்களுக்கு பரிசு வழங்குவதாக  சில அமைப்புகள் அறிவித்திருப்பதை அரசாங்கம் அறிந்தபோது, ​​ஏன் செங்கோட்டையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை" என்று சிங் கேள்வி எழுப்பினார்.

எங்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை வேளாண் சட்டங்களுக்கு எங்களுடைய எதிர்ப்பு தொடரும், ஆனால்  மக்களை தியாகம் செய்யவோ அல்லது அடிக்கவோ நாங்கள் இங்கு வரவில்லை என சிங் மேலும் கூறினார்.

 இதற்கிடையில், டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகளில் அதிருப்தி அடைந்த பாரதிய கிசான் யூனியனின் (BANU) தலைவர் தாக்கூர் பானு பிரதாப் சிங்கும், 'ஆண்டோலன்' ஆதரவை திரும்பப் பெறுவதாகக் கூறினார்.

 "ஜனவரி 26 அன்று டெல்லியில் நடந்த போராட்டத்திற்குப் பிறகு எங்கள் 58 நாள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன்" என்று சில்லா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங் கூறினார்.

Similar News