அமர்நாத் பனிலிங்க யாத்திரை திடீர் நிறுத்தம் - என்ன காரணம்?

அமர்நாத் பனிலிங்க யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-07-05 13:56 GMT

அமர்நாத் பனிலிங்க யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வார்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு 30ஆம் தேதி முதல் 12 யாத்திரை மீண்டும் தொடங்கியது வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும் என திட்டமிடப்பட்டது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.

எந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வானிலை நிலவரம் மோசமான காரணமாக அமர்நாத் பனி லிங்க யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், பக்தர்கள் யாரும் செல்ல முயற்சி செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Source - Maalai Malar

Similar News