காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு - சிக்கிய கட்டு காட்டாக பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி

கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீஸார் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீடுகளில் அதிரடி ரைடு நடத்தியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-07-06 11:00 GMT

கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீஸார் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீடுகளில் அதிரடி ரைடு நடத்தியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் முறைகேடாக பணம் சம்பாதித்த தகவல் அடிப்படைகள் கர்நாடக மாநிலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் அகமது கான் பங்களா உள்ளிட்ட பெங்களூரின் ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

தேடுதலின் போது கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் விலை உயர்ந்த பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த நிலையில் ஜமீர் ஊழல் செய்து முறைகேடாக பணம் சம்பாதிப்பதாக அமலாக்கத்துறை சார்பில் ஏ.சி.பி எனும் ஊழல் ஒழிப்பு போலீஸ் தகவல் கொடுத்துள்ளார், அதன் அடிப்படையில் இந்த ரைடு நடத்தப்பட்டது என தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ ஜமீரின் வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் போலீசார் சோதனை நடத்தின கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் இருந்ததால் அதன் மதிப்பை கண்டறியும் நபர் வரவழைக்கப்பட்டு கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது கர்நாடகா அரசியல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


Source - Dinamalar

Similar News