சசிகலாவின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து! சகோதரர் திவாகரன் பரபரப்பு தகவல்!

சசிகலாவின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து! சகோதரர் திவாகரன் பரபரப்பு தகவல்!

Update: 2021-01-21 09:36 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ராஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வருகின்ற 27ம் தேதி விடுதலை பெறுவார் என அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்திருந்தார்.

இதனிடையே அவருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறை வளாகத்திலேயே மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர் பரிந்துரையின்படி அவரை பெங்களூரு அரசு மருத்துவமனையான பவுரிங்கில் அனுமதித்தனர். 

ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறங்கியதும் அவரை வீல் சேரில் வைத்து மருத்துவர்கள் அழைத்து சென்றனர். இதனிடையே அவருக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.

இந்த தகவலை கேள்விப்பட்டதும் சசிகலா உறவினர்கள் அனைவரும் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். இதனால் பவுரிங் மருத்துவமனை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சசிகலாவுக்கு சரியாக சிகிச்சை தரப்படவில்லை எனவும், அவரது உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது என சசிகலாவின் சகோதரர் திவாகரன் பரபரப்பான தகவலை கூறியுள்ளார். இதனால் மேலும் பதற்றம் நீடிக்கிறது

Similar News