பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அனைவருக்கும் மிகப்பெரிய சல்யூட்- பிரதமர்.!

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அனைவருக்கும் மிகப்பெரிய சல்யூட்- பிரதமர்.!

Update: 2021-01-24 15:59 GMT
 பெண் குழந்தைகளுக்கு கல்வி பயில்வதற்கான அதிக வாய்ப்புகள், சிறந்த சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பாலின உணர்திறன் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு குறிப்பிட்டார். தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தைக்கு அதிகாரம் அளிப்பதில் பணியாற்றுவோருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். 

மேலும் தேசத்தின் பெண் குழந்தைகள் கண்ணியமும் வாய்ப்பும் நிறைந்த வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்தார். தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்கு பிரதமரும் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகளின் சாதனைகளைப் பாராட்டினார். பெண் குழந்தைகளின் வலுவூட்டலுக்காக தொடர்ந்து பணியாற்றி வருபவர்களையும் பிரதமர் மோடி பாராட்டினார்.

"பெண் குழந்தையை மேம்படுத்துவதற்கும், அவர்கள் கண்ணியமும் வாய்ப்பும் நிறைந்த வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதற்கும் உழைக்கும் அனைவரையும் குறிப்பாக பாராட்ட வேண்டிய ஒரு நாள் இது" என்று பிரதமர் மோடி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2008 ஆம் ஆண்டில் அரசாங்கம் முதல்முறையாக ஜனவரி 24 ஐ தேசிய பெண் குழந்தை தினமாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Similar News