70 சதவிகிதம் குறைந்த இடதுசாரி தீவிரவாதம் - அமித்ஷா பெருமிதம்
'இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எண்ணிக்கையை 70 சதவிகிதம் குறைந்துள்ளது பா.ஜ.க அரசு' என அமித்ஷா கூறியுள்ளார்.
'இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எண்ணிக்கையை 70 சதவிகிதம் குறைந்துள்ளது பா.ஜ.க அரசு' என அமித்ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் கூறியதாவது, 'வடகிழக்கில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான பகுதியிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை மோடி அரசு நீக்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எண்ணிக்கையை 70 சதவிகிதம் அளவிற்கு குறைத்துள்ளது.
பாதுகாப்பான வடகிழக்கு மற்றும் பாதுகாப்பான மத்திய இந்தியாவின் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அரசு மோடி அரசு. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த எட்டு ஆண்டுகளில் வழக்கில் மொத்தம் 8,200 விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன ஆனால் பா.ஜ.க ஆட்சியில் இந்த எண்ணிக்கை 1200 என குறைந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின்போது 304 பாதுகாப்பு படையினர் உயிரிழந்த நிலையில் மோடி ஆட்சியில் வடகிழக்கில் 87 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்' என குறிப்பிட்டார்.