'ஊழல் செய்தால் சட்டத்தின் முன் சோனியா, ராகுல் தலைகுனியத்தான் வேண்டும்' - பா.ஜ.க'வின் பதிலடி

'ஊழல் செய்தால் சட்டத்தின் முன்பு தலைவணங்கத்தான் வேண்டு'மென காங்கிரசுக்கு பா.ஜ.க பதிலளித்துள்ளது.

Update: 2022-06-03 11:30 GMT

'ஊழல் செய்தால் சட்டத்தின் முன்பு தலைவணங்கத்தான் வேண்டு'மென காங்கிரசுக்கு பா.ஜ.க பதிலளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழின் பங்குகள் விற்பனை தொடர்பான பண மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியும் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியிருந்தது.

இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பு கூறுகையில், 'ஆளுங்கட்சி இது போன்ற போலியான ஜோடிக்கப்பட்ட வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் கோழைத்தனமான சதியில் இருந்து வெற்றி பெற முடியாது' என அறிவித்திருந்தது.


காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம், 'கூறுகையில் ஊழல் செய்தால் மக்களுக்கு பயந்து சட்டத்தின் முன்பு தலைவணங்க தான் வேண்டும். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றச்சாட்டை பாஜக நிராகரிக்கிறது' என்றார்.

'சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும். மேலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் ஊழல் வழக்கில் தற்போது ஜாமீனில் தான் இருக்கின்றன என்பதை காங்கிரஸ் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.

சோனியா மருமகன் ராபர்ட் வதேரா நில பேர ஊழல் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் பெற்று இருக்கிறார். இந்தியாவில் மட்டும் அல்ல உலகிலேயே அதிக ஊழல் குடும்பம் என்று ஒன்று இருந்தால் அது சோனியா காந்தி குடும்பம் தான்.

மக்கள் சோனியா காந்தி குடும்பத்தை நம்பிக்கையுடன் பார்த்தார்கள் ஆனால் அவர்கள் நாட்டை கொள்ளை அடிக்க முயன்றனர், அதனால்தான் எந்த நீதிமன்றமும் அவர்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யவில்லை. 2015ல் இந்த வழக்கில் தங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ரத்து செய்ய வேண்டும் என சோனியா காந்தியின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது, மேலும் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் தலையிட மறுத்து விட்டது' எனக் கூறினார்.


Source - Junior Vikatan

Similar News