பிரிவினைவாதி யாசின் மாலிக் மீதான வழக்கு - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பான தீர்ப்பு

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்'ற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2022-05-25 14:18 GMT

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்'ற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என டெல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்திய தண்டனைச் சட்டம் 124k தேச விரோத செயல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் அவரது தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என தேசிய புலனாய்வு முகமை வலியுறுத்தி இருந்தது அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வெளியிட்டுள்ளது.


Source - Nakkeran

Similar News