5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.. எதுக்கு தெரியுமா.!

5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு.. எதுக்கு தெரியுமா.!

Update: 2021-02-20 18:30 GMT

மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் தற்போது 4 மாநிலங்களிலும் தொற்று அதிகரிப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 5 மாநிலங்களில் தினமும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் வேளையில், மத்திய அரசு அங்கு கொரோனா தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டது. கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது. அதே போன்று பஞ்சாப் மாநிலத்தில் பாதிப்புகள் குறைந்த நிலையில் சில தினங்களாக அதிகரித்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று கேரளா, சட்டீஸ்கர் மாநிலங்களிலும் பாதிப்புகள் அதிகரிக்கிறது. எனவே அந்த மாநிலங்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒட்டு மொத்த பாதிப்பில் 75.78 சதவீதம் பேர் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் உள்ளனர். எனவே இந்த மாநிலங்கள் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த வேகமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Similar News