சர்தார் வல்லபாய் படேலுக்கு நாடு அஞ்சலி செலுத்துகிறது: பிரதமர் மோடி உரை!

நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே முன்னேற முடியும், லட்சியங்கள் நிறைவேறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2021-10-31 07:20 GMT

நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே முன்னேற முடியும், லட்சியங்கள் நிறைவேறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது: நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சர்தார் வல்லபாய் படேலுக்கு நாடு அஞ்சலி செலுத்துகிறது. வரலாற்றில் மட்டும் அவர் வாழவில்லை. ஒவ்வொரு இந்தியர்களின் மனங்களிலும் வாழ்ந்து வருகிறார். புவியியல் ரீதியாக மட்டும் இந்தியா இணைந்த பகுதி கிடையாது. 135 கோடி மக்கள் வாழும் நிலத்தில் நமது ஆன்மா, கனவு மற்றும் லட்சியம் ஆகியவை ஒருங்கிணைந்துள்ளது. 


மேலும், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் சமூக ரீதியாக வளர்ந்த நமது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமானது. ஒரே பாரம், சிறந்த பாரதம் என்ற உணர்வை அளிக்கிறது. நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் முன்னேற முடியும். லட்சியங்களும் நிறைவேறும். முன்னேறி செல்ல முடியும். நமது நாடு எப்போதும் வலிமையாகவும், உணர்திறன் மிக்கதாகவும், வளர்ச்சி பெற்றதாகவும் திகழ வேண்டும் என்று விரும்பியவர். அது மட்டுமின்றி அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் சமூ உரிமை கிடைக்கவும் விரும்பினார்.

நாடு மீது அதிகமான முக்கியத்துவம் அளித்தார். அவர் கொடுத்த உத்வேகத்தால் நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. கடந்த ஏழு வருடங்களில் நாட்டிற்கு தேவைப்படாத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமையை போற்றும் கொள்கைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களாகட்டும் அல்லது கிராமமாகட்டும் அனைத்தும் வளர்ச்சி பாதையில் செல்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News