கோவாவின் மணிமகுடம் அதன் பொது சிவில் சட்டமே.! குடியரசுத் தலைவர் பாராட்டு.!

கோவாவின் மணிமகுடம் அதன் பொது சிவில் சட்டமே.! குடியரசுத் தலைவர் பாராட்டு.!

Update: 2020-12-20 17:31 GMT

போர்த்துகீசிய காலனித்துவ ஆட்சியின் பிடியிலிருந்து கோவா விடுவிக்கப்பட்ட 60 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இன்று மாநிலத்தில் நடைபெற்ற கோவா விடுதலை தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், மாநிலத்தில் நடைமுறையில் உள்ள பொது சிவில் சட்டத்தை பாராட்டியதோடு, இது பெருமை வாய்ந்த விஷயம் என்று குறிப்பிட்டார்.

கோவா குடிமக்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொண்டது பெருமைக்குரிய விஷயம் என்று ராம்நாத் கோவிந்த் கூறினார். அவ்வாறு செய்வதன் மூலம், கோவாவில் கலாச்சார பன்முகத்தன்மை ஊக்குவிக்கப்பட்டுள்ளது என்று மேலும் கூறினார். குடியரசுத் தலைவர் கோவிந்தின் அறிக்கை நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வரும் நேரத்தில் வருகிறது.

குடியரசுத் தலைவர் தனது உரையில், "இன்று கோவாவுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் குறிப்பாக மறக்கமுடியாத நாள். 1961 ஆம் ஆண்டில், சுமார் 450 ஆண்டுகள் காலனித்துவ ஆட்சியின் பின்னர், கோவா வெளிநாட்டு ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டது. உங்கள் மூதாதையர்கள் சுதந்திரத்தின் ஜோதியை விடவில்லை பல சுதந்திர போராளிகள் தங்கள் உயிரை தியாகம் செய்து இதை பெற்றனர்"  எனக் கூறினார்.

கோவா மக்களை மிகவும் கடின உழைப்பாளிகள் என்று கூறிய ராம்நாத் கோவிந்த், "இன்று, கோவா சுதந்திரம் அடைந்து 60 ஆவது ஆண்டுக்குள் நுழையும் போது, தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் கோவா முன்னணியில் உள்ளது என்பதைக் காண்பது பெருமைக்குரிய விஷயம்.

இதற்காக கடினமாக உழைத்த உழைப்பாளி வர்க்கம், மக்கள் பிரதிநிதிகள், பொது ஊழியர்கள் மற்றும் கோவாவின் தொழில்துறையை நினைத்து மாநிலம் பெருமை கொள்ள வேண்டும்"  எனக் கூறினார். ஆத்மநிர்பார் பாரத் என்ற மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையின் கீழ், கோவாவில் முதலமைச்சர் பிரமோத் சாவந்தின் ஆத்மிர்பர் பாரத் சுயம்பர்ணா கோவா முயற்சியை ராம் நாத் கோவிந்த் அப்போது பாராட்டினார்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆசாத் கோமந்தக் தளம் மற்றும் கோவா முக்தி சேனா போன்ற அமைப்புகள் மாநிலத்தை போர்ச்சுகளிடமிருந்தது விடுவிக்க மேற்கொண்ட முயற்சிகளையும் குடியரசுத் தலைவர் பாராட்டினார்.

கோவா மக்களின் விருந்தோம்பல் உணர்வைப் பாராட்டிய அவர், "மாநிலத்தின் 160 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரையில் உலகின் மிக அழகான கடற்கரைகள் உள்ளன. கோவாவின் இயற்கை அழகு தனித்துவமானது, இங்குள்ள மக்கள் அதிதி தேவோ பாவா பாரம்பரியத்தின் உண்மையான பிரதிநிதிகள்" என்று கூறினார்.

கொரோனா காலத்தில் கோவா அரசாங்கத்தின் பணிகளைப் பாராட்டிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசு நிதியளிக்கும் சுகாதார காப்பீட்டுத் திட்டம் மற்றும் வலுவான பொது சுகாதார உள்கட்டமைப்பு காரணமாக, தொற்றுநோய்களின் போது கோவா அரசு தனது மக்களை சரியான முறையில் கவனித்துக்கொள்ள முடிந்தது என்று கூறினார்.

Similar News