கொரோனா சோதனையில் இருந்து தப்பிக்க பயணிகள் செய்யும் ராஜதந்திரம்.!

கொரோனா சோதனையில் இருந்து தப்பிக்க பயணிகள் செய்யும் ராஜதந்திரம்.!

Update: 2020-11-30 15:18 GMT

கொரோனா தொற்றின் 2வது அலை வீசக் கூடும் என்ற அச்சத்தால், அதிக தொற்று பாதிப்பு இருக்கும் மாநிலங்களிலிருந்து வருவோர்களுக்கு கொரோனா பரிசோதனையை மகாராஷ்டிர அரசு கட்டாயமாக்கியுள்ளது.

கொரோனா தொற்று அதிகம் பாதித்துவரும், டெல்லி, ராஜஸ்தான், குஜராத், கோவாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் வரும்போது, கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பதை உறுதி செய்ய கட்டாயமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் இருந்து வருவோர்களுக்கு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மாநில எல்லைப் பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் இருந்து தப்பிக்க, கோவாவிலிருந்து, மகாராஷ்டிராவுக்கு வரும் பெரும்பாலானோர், சாலை வழியாக பெலகாவி, ஹூபள்ளி, மங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்துவிட்டு, அங்கிருந்து மீண்டும் மும்பை உள்பட மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் விமானம் மூலம் செல்கின்றனர்.

பஞ்சாப்பில் இருந்து நேரடியாக மகாராஷ்டிரா வந்தால், நிச்சயமாக பயண விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஆனால், கர்நாடகத்திலிருந்து வந்தால் அந்த விதிமுறைகள் பொருந்தாது. இது போன்று அரசு விதிமுறைகளை மீறி செல்பவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே கொரோனா பரிசோதனை செய்து கொண்டு முறையாக செல்வது அனைவரின் கடமையும் கூட என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Similar News