காவல்துறைக்கு எதிராகக் குற்றம்சாட்ட விவசாயிகளால் தூண்டப்பட்ட முகமூடி மனிதன்- வெளிவந்த உண்மை!

காவல்துறைக்கு எதிராகக் குற்றம்சாட்ட விவசாயிகளால் தூண்டப்பட்ட முகமூடி மனிதன்- வெளிவந்த உண்மை!

Update: 2021-01-25 07:30 GMT
கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்கள் ஒரு முகமூடி அணிந்த மனிதனைக் கொண்டுவந்து இவன் காவல்துறையால் தூண்டப்பட்டு குடியரசு தினத்தில் நான்கு விவசாய தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டுள்ளனர் என்ற ஒரு பரபரப்பு குற்றச்சாட்டைக் கொண்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து ஹரியானா காவல்துறை அதில் உள்ள உண்மையைக் கண்டறிந்துள்ளது. அந்த காவல்துறைக்கு எதிராகத் தவறான குற்றச்சாட்டைக் கூற விவசாய தலைவர்களால் தூண்டப்பட்டுள்ளான் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவன் விவசாயிகளால் அடிக்கப்பட்டு மற்றும் காவல்துறைக்கு எதிராகத் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தூண்டப்பட்டுள்ளான். 
நேற்று மாலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில், சோனிபட் SP ஜஷாந்தீப் சிங் தண்டவா, முகமூடி மனிதன் குற்றம்சாட்டிய ராய் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரதீப் என்னும் நபர் அந்த காவல் நிலையத்தில் இல்லை மற்றும் அந்த பெயர் கொண்ட எந்த காவலதிகாரியும் சுற்றியுள்ள காவல்நிலையங்களில் இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் முகமூடி அணிந்த தடுத்தோ அல்லது கைது செய்யப்படவில்லை, அவரிடம் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது என்றும் காவல்துறை குறிப்பிட்டது. 

வெள்ளிக்கிழமை விவசாயிகளால் அந்த முகமூடி நபர் முன்னிறுத்தப்பட்டபோது, அவன் குடியரசு தினத்தில் பேரணி நடத்தும் விவசாயிகள் கட்டுப்பாட்டை மீறிவிட்டால் அவர்கள் மீது தடியடி நடத்த காவல்துறை கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார். மேலும் மேடையில் வைத்து நான்கு விவசாயிகளைக் கொல்லவும் கூறியதாக காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை அவர் கூற மறந்த போது விவசாய தலைவர் ராகேஷ் டிகைட் நினைவுகூர்ந்தார்.  இது சந்தேகத்தை எழுப்பக் காரணமாக இருந்தது. 
அந்த சந்தேகம் உண்மை என்று நிரூபிக்கும் விதமாக, நேற்று அந்த முகமூடி மனிதனின் வீடியோவில் அவன் விவசாயிகளால் தவறான குற்றச்சாட்டுகளைக் கூற துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தான். யோகேஷ் சிங் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் விவசாயிகளால் தூண்டப்பட்டது என்று தெரிவித்தான். மேலும் விவசாயிகளுக்கு எதிராகச் சதித்திட்ட குற்றச்சாட்டைக் கூறி ஹரியானா காவல்துறைக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கவிட்டால், அவனைக் கொன்றுவிடுவதாக ஒரு விவசாயி எச்சரித்ததாகவும் கூறினான். 
மேலும் அந்த குற்றச்சாட்டுகளை வலுவாக்க விவசாயிகள் யோகேஷ் சிங் மொபைலில் எல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் நான்கு விவசாய தலைவர்களின் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஹரியானா காவல்துறை அந்த நான்கு விவசாயிகள் புகைப்படங்களையும் மீட்டெடுத்தது. இதில் ஒரு சுவாரசியமாக, செய்திதொடர்பார்களின் கூட்டத்தில் காவல்துறை வந்த பொழுது அவர்களிடம் அந்த முகமூடி நபரை ஒப்படைக்க விவசாயிகள் தயங்கினர். அவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் காவல்துறையிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் அவனைத் துன்புறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். 

Similar News