5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம் - இனி வரும் ஆண்டுகளில் வளர்ச்சி காணும் துறை?

5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம் - இனி வரும் ஆண்டுகளில் வளர்ச்சி காணும் துறை?

Update: 2020-12-01 06:25 GMT

2020 ஆண்டுக்கான ஹோராசிஸ் ஆசியா கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) துறைகளில் மட்டும், தற்போதுள்ள 5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், "எம்.எஸ்.எம்.இ துறைகளில் இருந்து மட்டுமே 5 கோடி கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், இந்தியா உலகின் சிறந்த ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாறும்" என்று கூறினார்.

"சீனாவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவுக்கு பெரும் ஆற்றல் கிடைத்துள்ளது. இளம் வயதினர், திறமையான மனிதவளம், மூலப்பொருள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் சாதகமான கொள்கை கிடைப்பது முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பை அளிக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியில் எம்.எஸ்.எம்.இ பங்களிப்பை 30% முதல் 40% வரை எடுத்துக்கொள்வதும், எம்.எஸ்.எம்.இ ஏற்றுமதியை 48% முதல் 60% ஆக உயர்த்துவதும் அரசாங்கத்தின் இலக்கு என்று கட்கரி கூறினார்.

முதன்முதலாக நடந்த ஹொராஸிஸ் ஆசியா சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக தயாராவதற்கும், தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக சவால்களை சமாளிப்பதற்கும் திட்டத்தை முன்னெடுக்க உலகெங்கிலும் இருந்து 400 வணிக மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் உட்பட 400 பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பை ஹொராசிஸின் தலைவர் பிராங்க்-ஜூர்கன் ரிக்டர் தலைமையேற்று நடத்தினார்.

பொருளாதார நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்வதிலும், வேலைவாய்ப்பு உருவாக்கம், கொரோனா வைரஸுக்குப் பிந்தைய உலகில் இப்பகுதியில் எவ்வளவு பெரிய நிலையான வளர்ச்சி ஏற்படக்கூடும் என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

Similar News