விவசாயிகளின் போராட்டத்தில் தீவிரவாதியின் கொடி! எல்லை மீறிப்போகும் போராட்ட களம்!

விவசாயிகளின் போராட்டத்தில் தீவிரவாதியின் கொடி! எல்லை மீறிப்போகும் போராட்ட களம்!

Update: 2021-02-07 07:48 GMT

லூதியானாவில் நடந்த 'சக்கா ஜாம்' போராட்டத்தில் கைஸ்தானிய பயங்கரவாதி ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலேவின் உருவப்படத்துடன் கூடிய கொடி டிராக்டரில் காணப்பட்டதாகக் கூறி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் கெளரவ் பாட்டியா இந்த சம்பவத்தை கண்டித்து பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை விமர்சித்தார். "லூதியானாவில் நடந்த சக்கா ஜாம் போராட்டத்தில் காலிஸ்தானிய பயங்கரவாதி பிந்த்ரான்வாலேவின் கொடி பறக்கிறது.

அமரீந்தர் சிங் என்ன செய்கிறார்? சட்டம் மற்றும் ஒழுங்கு பஞ்சாபில் சரிந்துள்ளது" என்று அவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இருப்பினும், டைம்ஸ் நவ் ஊடகத்தால் வீடியோவின் நேரம் அல்லது இடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.

 

இதற்கிடையில், 'சக்கா ஜாம்' முற்றிலும் அமைதியானது என்று பாரதிய கிசான் யூனியன் (உக்ரஹான்) பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கோக்ரிகலன் கூறினார்.

சண்டிகர்-ஜிராக்பூர், அமிர்தசரஸ்-பதான்கோட், டார்ன் தரன்-கபுர்தலா, ஃபெரோஸ்பூர்-பாசில்கா, முக்த்சர்-கோட்காபுரா, பாடிந்தா-சண்டிகர், பாசில்கா-மாலவுட், லூதியானா-ஜலந்தர், பஞ்சோரேல்-பிஞ்ச் கர்னல்-கைதால், பிவானி-ஹிசார், அம்பாலா-சண்டிகர், அம்பாலா- ஹிசார் மற்றும் மான்சா-சிர்சா ஆகிய பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்  தடுக்கப்பட்டதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

Similar News