புதிய நாடாளுமன்ற கட்டிடம் எப்போது திறக்கப்படும்? வெளியான முக்கிய தகவல்
புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழா வரும் நவம்பர் மாதம் இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழா வரும் நவம்பர் மாதம் இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது, இதில் எம்.பி'க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம் பெறுகின்றன. மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மிகப்பெரிய அலுவலகங்கள், கூட்ட அரங்கு, உணவு கூடங்கள் இதில் மிகுந்த சவுகரியங்கள் உடன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான கட்டுமானத்தை இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26'ம் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.