கைது செய்யப்பட்ட சீன ராணுவ வீரரை சீனாவிடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்!

கைது செய்யப்பட்ட சீன ராணுவ வீரரை சீனாவிடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்!

Update: 2021-01-11 16:45 GMT
 மூன்று நாட்களுக்கு முன்பு கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஒரு சீன ராணுவ வீரர் இன்று சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. சீன இராணுவத்தின் ஒரு வீரர் வெள்ளிக்கிழமை காலை கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் த்சோவின் தென் கரையில் கைது செய்யப்பட்டார். அவர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இந்தியப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.


இதையடுத்து, சீன ராணுவம் தனது வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்ததோடு, இந்தியாவிடமுள்ள தங்கள் வீரரை திரும்ப ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்தது. இதற்கு பதிலளித்த இந்திய ராணுவம், மேலதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று, உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர் சீனாவிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தது.


இதையடுத்து கிழக்கு லடாக்கில் உள்ள சுசுல்-மோல்டோ எல்லைப் புள்ளியில் இன்று காலை 10.10 மணிக்கு கைது செய்யப்பட்ட சீன ராணுவ வீரர் மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கிழக்கு லடாக்கில் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக இந்திய மற்றும் சீன வீரர்கள் பதட்டமான எல்லை மோதலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Similar News