அனைவருக்கும் மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டம்! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!
நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டையாக தரப்படும்.;
நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டையாக தரப்படும்.
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 3வது ஆண்டை தேசிய சுகாதார ஆணையகம் கொண்டாடுகின்ற வேளையில், நாடு தழுவிய ஆயுஸ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். இதன் மூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் மருத்துவ அடையாள எண் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: ANI