விவசாய போராட்டங்களுக்கு காலிஸ்தானை தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக கூறும் மாவோயிஸ்ட்!

விவசாய போராட்டங்களுக்கு காலிஸ்தானை தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக கூறும் மாவோயிஸ்ட்!

Update: 2021-02-02 08:30 GMT
தற்போது டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிஸ்தானிய ஆதரவாளர்களுடன் வன்முறையை நடத்தி வருவதைத் தொடர்ந்து, தற்போது இடதுசாரி அமைப்புகளும் அந்த போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட CPI மாவோயிஸ்ட் அமைப்பு இந்த போராட்டத்திற்கு ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
மாவோயிஸ்ட்களின் மூன்று வெவ்வேறு அமைப்புகள் தற்போது விவசாய போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி தலைநகரில் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது. சட்டவிரோத அமைப்பான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியான மாவோயிஸ்ட் அமைப்பு இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்க மக்களைத் தீவிரவாதத்தில் ஈடுபடச் செய்கின்றது. 
CPI மாவோயிஸ்ட்டின் செய்தி தொடர்பாளர் அபேய், மத்திய அரசாங்கம் வேளாண் சட்டங்களுக்கு தங்கள் பிடிவாதத்தைக் காட்டுவதாகக் கூறினார். சட்டவிரோத அமைப்புகள் இதுபோன்று கூறி போராட்டக்காரர்களை மூளைச் சலவை செய்து வருகின்றது. இதனால் குடியரசு தின அமைதி டிராக்டர் பேரணி வன்முறையாகக் கிளம்பியது. மேலும் பல காவல்துறையினர் அதில் காயமடைந்தனர். 
ஆர்ப்பாட்டக்காரர்கள் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியில் தடுப்புகளை உடைத்து, பொதுச் சொத்துக்களைச் சேதம் செய்து பல வன்முறையில் ஈடுபட்டனர். இதுதவிர அவர்களைத் தடுக்க முயன்ற காவல்துறை மீதும் ட்ராக்டர்கள் வைத்து மோதச் சென்றனர். 

Similar News