மனிதக் கழிவுகளை கையால் அள்ள தடை ! பிச்சை எடுப்பவர்களுக்கான திட்டங்கள் - அடுத்த லெவலுக்கு இந்தியாவை கட்டமைக்கும் மத்திய அரசு !

The Ministry of Social Justice and Empowerment has formulated a scheme "SMILE - Support for Marginalized Individuals for Livelihood and Enterprise"

Update: 2021-08-11 08:21 GMT

indialegallive

நலிவடைந்த தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு உதவ, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 'ஸ்மைல்' என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் பிச்சை எடுப்பவர்களின் மறுவாழ்வக்கான துணைத் திட்டமும் உள்ளது.

இதில் பிச்சை எடுக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, மருத்துவ வசதி அளிப்பது, ஆலோசனை வழங்குவது, கல்வி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

பிச்சை எடுப்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவு நிதி மற்றும் மேம்பாட்டு கார்பரேஷனுக்கு மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.1.50 கோடியை வழங்கியுள்ளது. பிச்சை எடுத்து வந்த 514 பேருக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.182 கோடி ஒதுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றுபவர்கள் எந்த மாநிலத்திலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மனிதக் கழிவுகளை அகற்றுபவர்கள் இன்னமும் இருப்பதாக சில தன்னார்வ அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், இதற்கான ஆதாரங்களை நிருபிக்க முடியவில்லை.

கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 309 பேர் கடந்த 5 ஆண்டுகளில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், கைகளால் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மதுரையில் கைகளால் கழிவுகளை அகற்றும் இரு துப்புரவு தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் மறுவாழ்வுக்கு ரூ.40,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News