இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.!

Update: 2021-01-06 16:40 GMT

இந்தியாவில் உருமாறிய புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், ஓராண்டை கடந்தும் உலகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கிடையே, இங்கிலாந்தில் உருமாறிய நிலையில் புதியவகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து வந்த பயணிகள் மூலம் இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் இங்கிலாந்து விமான சேவைக்கு மத்திய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இதனை தொடர்ந்து, வரும் 8ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. சர்வதேச விமானங்களில் வந்து சேரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கு புதியவகை கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்களின் மாதிரிகள் 10 அரசு பரிசோதனை மையங்களில் பரிசோதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று மேலும் 13 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, நாடு முழுவதும் புதியவகை கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த மாநில அரசுகளால் தனி அறையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Similar News