இளைஞர்களின் குரலைக் கேட்பதே இந்த தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தின் நோக்கம்!

இளைஞர்களின் குரலைக் கேட்பதே இந்த தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தின் நோக்கம்!

Update: 2021-01-12 17:15 GMT

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதி நாளான இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் இறுதி நாளான இன்று மூன்று தேசிய வெற்றியாளர்களும் இதங்கள் கருத்துக்களை தெரிவிப்பார்கள் என்று பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

18 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் குரலைக் கேட்பதே இந்த தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தின் நோக்கம் என்றும், வாக்களிப்பு மற்றும் பொது சேவைகள் உட்பட வரும் ஆண்டுகளில் பல்வேறு தொழில்களில் இணைய உள்ள இளைஞர்களின் கருத்துக்களை கேட்பது அவசியம் என்றும் மேலும் தெரிவித்திருந்தது.

முன்னதாக பிரதமர் மோடி தனது மான் கி பாத் உரையில், டிசம்பர் 31, 2017 அன்று அளித்த யோசனையின் அடிப்படையில் இந்த தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா அமைந்துள்ளது. மேலும் முதல் திருவிழா 2019 ஜனவரி 12 முதல் பிப்ரவரி 27 வரை புதிய குரலாக இருங்கள் என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து இரண்டாவது தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா, கொரோனா காரணமாக கடந்த டிசம்பர் 23 அன்று வீடியோ கான்பெரன்ஸ் மூலம் தொடங்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் இருந்து 2.34 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த விழாவின் முதல் கட்டத்தில் பங்கேற்றனர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 5 வரை வீடியோ கான்பெரன்ஸ் முறை மூலம் மாநில இளைஞர் பாராளுமன்றங்கள் பின்பற்றப்பட்டன. இறுதிப் போட்டிகள் ஜனவரி 11’ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 முதல் 16 வரை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 12 சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் மற்றும் தேசிய இளைஞர் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, தேசிய இளைஞர் விழாவுடன் தேசிய இளைஞர் பாராளுமன்ற நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Similar News