மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் முடிந்துள்ளதால் கேரள சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை அடைக்கப்பட்டுள்ளது.
காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் அரச குடும்பத்தினர் பங்கேற்ற பின்னர் கோயிலின் நடை அடைக்கப்பட்டது. முன்னர் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்ட திருவாபரணங்கள் பதினெட்டாம் படி வழியாக கீழே இறக்கப்பட்டு பந்தள அரண்மனைக்கு நடை பயணமாக திருப்ப எடுத்து செல்லப்பட்டது. மேலும், கோயில் சாவி பந்தள அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai