நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகைக்கு தயாரா இருக்க வேண்டும்.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு.!

நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகைக்கு தயாரா இருக்க வேண்டும்.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு.!

Update: 2020-12-31 15:46 GMT

நாடு முழுவதும் ஜனவரி 2ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் வெற்றியும் பெற்றுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் 2021ம் ஆண்டு துவக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், மாநில சுகாதார செயலாளர்களிடம், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் மத்திய அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகர் மற்றும் சில மாவட்டங்களை தேர்வு செய்து, அங்கு ஜனவரி 2ம் தேதி தடுப்பூசி ஒத்திகை 3 கட்டங்களாக நடைபெறும் என கூறப்படுகிறது. எனவே, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தடுப்பூசிக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

Similar News