உலகிலேயே உயரமான சிவன் சிலை - இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா?
உலகிலேயே உயரமான சிவன் சிலை ராஜஸ்தானில் திறக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ராஜ் சமந்த் மாவட்டத்தில் உள்ள நந்துவாரா நகரில் விஸ்வரூபம் என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான சிவன் சிலை சனிக்கிழமை அன்று திறக்கப்பட்டுள்ளது. 369 அடி உயரம் உள்ள இது உலகிலேயே மிகப்பெரிய சிவன் சிலையாக கருதப்படுகிறது. ராஜஸ்தானில் பிரபலமான சுற்றுலா தளமாக உதய்பூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குன்றின் மீது இந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. தத்பதம் என்ற அமைப்பு இந்த சிலையை அமைத்திருக்கிறது.
தியான நிலை தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவன் சிலை 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கூட பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இரவிலும் இந்த சிலை காணக்கூடிய வகையில் ஒளி விளக்குகளால் அமைக்கப்பட்டிருக்கிறது. சிலைக்குள் அமைக்கப்பட்டுள்ள நான்கு லிப்ட்டுகள் மூன்று வரிசை படிக்கட்டுகள் மூலம் பக்தர்கள் உள்ளே சென்று பார்க்கலாம். இங்கு ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் மூன்று ஆயிரம் டன் உருகு மற்றும் இரும்பு கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்ற பயன்படுத்தி 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 250 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில், 250 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் வகையிலும் இந்த சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சிலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள பகுதிகளை சுற்றிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப் பட்டுள்ளது.
Input & Image courtesy: Zee News