போலி அடையாளத்துடன் பழகி சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞன்.!

போலி அடையாளத்துடன் பழகி சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞன்.!

Update: 2020-12-14 10:55 GMT
நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் 'லவ் ஜிகாத்' போன்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இது குறிப்பாக முஸ்லீம் ஆண்கள் முஸ்லீம் அல்லாத பெண்களைக் குறிவைத்து அவர்களிடம் தங்கள் அடையாளங்களை மறைத்து திருமணம் செய்து வருகின்றனர். அதே போன்ற வழக்கு தற்போது டெல்லியில் பதிவாகியுள்ளது. 

இது டெல்லி காவல்துறை 18வயது இளைஞன் ஷோயப் கானை, கடத்தல், மைனர் சிறுமியைக் கட்டாய திருமணம் செய்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்குக் கைது செய்த ஒரு நாள் கழித்து இதுவும் லவ் ஜிகாத் வழக்குடன் தொடர்புடையது என்று கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர், தன்னை SK சின்ஹா என்று பேஸ்புக்கில் அறிமுகம் செய்து கொண்டு பெண்களிடம் நண்பராகி வந்துள்ளது.

அதில் பாதிக்கப்பட்ட  15 வயது சிறுமியிடம் 2019இல் நண்பராகி வந்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 22 இல் டெல்லிக்குச் சென்று சிறுவயது சிறுமியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். 

அந்த சிறுமியைக் கடத்தி சென்று பீகாரில் அவரது நண்பரது இல்லத்தில் வைத்துள்ளார். சிறுமி காணாமல் போனதிலிருந்து தந்தை காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். அதன் பிறகே SK  சின்ஹாவை தேடுவதில் காவல்துறை இறங்கியுள்ளனர். விசாரணையில் அவர் ஷோயப் கான் என்பது தெரியவந்தது. காவல்துறை மேவாட் பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் இறங்கியது.

பாதிக்கப்பட்ட சிறுமி 46 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் மீது கடத்தல், குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நல ஆணையத்திடம் கொடுத்த அறிக்கை மற்றும் மருத்துவ பரிசோதனையின் படி, இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கும் பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதேபோன்று பல வழக்குகள் பதிவாகி வருகின்றன. தங்கள் அடையாளங்களை மறைத்து பின்னர் திருமணத்திற்கு மதமாற்றம் செய்ய வற்புறுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. 

Similar News