கொரோனா தடுப்பூசியை கூட அரசியலாக்கிவிட்டார்கள்.. கிருஷ்ணா யெல்லா கருத்து.!

கொரோனா தடுப்பூசியை கூட அரசியலாக்கிவிட்டார்கள்.. கிருஷ்ணா யெல்லா கருத்து.!

Update: 2021-01-04 21:33 GMT

இந்திய நாட்டில் கொரோனா தடுப்பூசி அரசியலாக்கப்படுகிறது என கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ள பாரத் பயோடெக் நிறுவன மேலாண் இயக்குனர் கிருஷ்ணா யெல்லா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற பெயரில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இது முற்றிலும் உள்நாட்டில் தயாரானது. இதனிடையே, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளையும் இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனாலும், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் நம்பகத்தன்மை குறித்து மக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. தடுப்பூசிகளுக்கு அவசர அவசரமாக அனுமதி வழங்கியுள்ளதாக பல்வேறு காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறது. இந்நிலையில், இது பற்றி கிருஷ்ணா யல்லா பேசியதாவது: கோவாக்சின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளது, இந்தியாவில் வைரஸ் தடுப்புசிகள் பற்றிய மிகப்பெரிய கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவாக்சின் பரிசோதனையை நாங்கள் இந்தியாவில் மட்டுமே செய்யவில்லை. இங்கிலாந்து, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் உட்பட 12 நாடுகளில் தடுப்பூசி பரிசோதனையை செய்து வருகிறோம். தடுப்பூசி தேவைப்படும் உலகில் உள்ள அனைவருக்கும் இந்த தடுப்பூசியை கொண்டு சேர்பதே எங்கள் நோக்கம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரதச்சத்தை அதிகரிப்பது மட்டுமின்றி 200 சதவீதம் பாதுகாப்பானது என்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியும் தற்போது அரசியலாக்கப்பட்டுவிட்டது. எனது குடும்பத்தை சேர்ந்த எவரும் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயல்படவில்லை என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

ஒரு வைரசுக்கு எதிராக கண்டுப்பிடிக்கப்பட்ட தடுப்பூசியை இப்படி அரசியல் லாபத்திற்காக பேசுவது சரியில்லை. எத்தனை லட்சம் மக்கள் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர். அவர்களுக்கு இது போன்ற மருந்துகள் முன்கூட்டியே கிடைத்திருந்தால் அவர்களும் இந்த உலகில் வாழ்ந்திருப்பார்கள்.

அல்ப அரசியல் லாபத்திற்கா காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தடுப்பூசியின் தரத்தை கேள்வி கேட்பது மிகப்பெரிய கண்டனத்துகுரியது என்றே சொல்லலாம்.
 

Similar News