இந்தியாவின் புகழ்பெற்ற வைணவ ஸ்தலமான திருமலை திருப்பதிக்கு, உலக சாதனை புத்தகத்தில் சிறப்பு இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் செல்வ மிக்க கோயில்களில் ஒன்றான திருமலை திருப்பதி, சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்குகிறது .இதனாலே பக்தர்கள் கூட்டம் அலை அலையாக வெங்கடாஜலபதி பெருமாளை தரிசிக்க வருகின்றனர்.
வருகின்ற பக்தர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் அன்னதானம் சிறந்த முறையில் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
ஏழு மலையை கொண்டிருக்கும் திருப்பதியின் இயற்கை எழிலை, குன்றாமலும் பாதுகாத்து வருகிறது தேவஸ்தானம்.
இந்த காரணங்களை கருத்தில் கொண்டு, இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சார்பில் உலக சாதனை புத்தகத்தில் திருமலைக்கு சிறப்பு இடம் வழங்கியுள்ளது.
இதற்கான சான்றிதழை அந்த நிறுவன தென்னிந்திய ஒன்றிய செயலர் உல்லாஜி, தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.
திருமலை திருப்பதிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் இந்தியர்களை பெருமையடைய செய்துள்ளது.