பெண்களுக்கு புதிய சிறப்பு சேமிப்புத் திட்டம் - பிரதமர் மோடி பாராட்டு!
விளிம்பு நிலை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது பிரதமர் மோடி பாராட்டு.
வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது பட்ஜெட் இது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சருக்கும், அவரது குழுவினருக்கும் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். நாட்டை கட்டமைப்பதில் பாரம்பரியமிக்க கலை வல்லுனர்களான கலைஞர்கள், தச்சர்கள், இரும்பு மற்றும் பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பக் கலைஞர்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். படைப்பாற்றலுடன் கடுமையாக பணியாற்றும் இத்தகைய கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் முதல் முறையாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள், பணியில் இருக்கும் மற்றும் இல்லத்தரசிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் வகையில் ஜல்ஜீவன் இயக்கம், உஜ்வாலா திட்டம், பிரதமரின் வீட்டுவசதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் பல்வேறு துறை சார்ந்த கோடிக்கணக்கான கலைஞர்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அளப்பரிய செயல்களை செய்யும் வகையில் அவை மேலும் வலுப்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். மகளிருக்கான, குறிப்பாக இல்லத்தரசிகள் மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய சிறப்பு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்க இந்த பட்ஜெட் வகை செய்கிறது.
Input & Image courtesy: News