நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் அருமையான ஊடகம் இதுதான்: பிரதமர் டுவிட்!

நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் அருமையான ஊடகம் இதுதான்: பிரதமர் டுவிட்!

Update: 2021-02-13 18:53 GMT
உலக வானொலி தினத்தை முன்னிட்டு இன்று நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் மோடி, சமூக தொடர்பை ஆழப்படுத்தும் ஒரு அருமையான ஊடகம் என்று வானொலியை விவரித்தார். இது தொடர்பாக வெளியிட்ட ஒரு ட்வீட்டில், அவர் தனது மாதாந்திர வானொலி ஒளிபரப்பான மான் கி பாத் மூலம் வானொலியின் நேர்மறையான தாக்கத்தை அனுபவித்ததாக கூறினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "அனைவருக்கும் உலக வானொலி தின வாழ்த்துக்கள். புதுமையான உள்ளடக்கம் மற்றும் இசையுடன் வானொலியை இயக்கிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் மற்றும் வானொலி கேட்போருக்கும் வாழ்த்துக்கள்.

இது ஒரு அருமையான ஊடகம். இது சமூக தொடர்பை ஆழப்படுத்துகிறது. வானொலியின் நேர்மறையான தாக்கத்தை நான் தனிப்பட்ட முறையில் மான் கி பாத் மூலம் அனுபவிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று சர்வதேச வானொலி தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 13 உலக வானொலி தினமாக அனுசரிக்கப்படுகிறது. பிப்ரவரி 13 ஊடகத்தை கொண்டாடும் நாளாக தேர்வு செய்யப்பட்டதற்கு காரணம், இதே நாளில் தான், 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் வானொலி மீண்டும் நிறுவப்பட்டது. இந்த நாளை உலக வானொலி தினமாக அறிவிக்கும் யுனெஸ்கோவின் திட்டத்தை 2013 ஜனவரி 14 ஆம் தேதி ஐ.நா பொதுச் சபை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

Similar News