முதலீட்டுக்கு இது சரியான தருணம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் தொழில் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு இதுவே சரியான தருணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2022-02-06 07:34 GMT

மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் தொழில் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு இதுவே சரியான தருணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: நடுநிலையான வளர்ச்சி மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்ப்பது போன்ற இரண்டு நோக்கங்களை கொண்டு 2022, 2023 நிதியாண்டு பட்ஜெட்டில் நிதி அதிகளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற நல்ல வாய்ப்பினை தொழில்துறையினர் நழுவ விடக் கூடாது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான தருணம். மேலும், தடுப்பூசி மருந்துகள், மரபணு ஆய்வுகள் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அது மட்டுமின்றி பல்வேறு துறைகள் தனியார் முதலீடுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: World Finance

Tags:    

Similar News