தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதியில்லை !

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று குஜராத் மாநிலம், அகமதாபாத் மாநகராட்சி கூறியுள்ளது.

Update: 2021-09-20 11:46 GMT

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று குஜராத் மாநிலம், அகமதாபாத் மாநகராட்சி கூறியுள்ளது.

இது பற்றி அகமதாபாத் மாநகராட்சி கூறியிருப்பதாவது: ஆமதாபாத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை பேப்பர் வடிவிலோ அல்லது போனிலோ எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும்.

மாநகராட்சியின் கீழ் வரும் பொது போக்குவரத்து மற்றும் பொது கட்டடங்கள், அரசு சார்ந்த பொது இடங்களில் சரிபார்க்கப்படும். அதன்படி தடுப்பூசி போடாதவர்களுக்கு பேருந்து மற்றும் நூலகங்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடம் மற்றும் ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் நுழைவதற்கு அனுமதியில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News